ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் M3 மாடலை ஐந்து மாதங்கள் முன்பு அறிமுகம் செய்தது. தற்போது இந்த லேப்டாப் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் மற்றும் விஜய் சேல்ஸ் தளங்களில் மேக்புக் ஏர் M3 மாடலுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் வங்கி சார்ந்த தள்ளுபடிகள், இதர பலன்கள் அடங்கும்.
மேக்புக் மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது மிகவும் அரிது. அந்த வகையில், தற்போதைய அறிவிப்பு மேக்புக் வாங்க நினைப்போருக்கு அதிக சேமிப்புகளை வழங்கும். விஜய் சேல்ஸ்-இல் மேக்புக் ஏர் M3 மாடலின் 8GB ரேம், 256GB SSD கொண்ட மாடலின் விலை ரூ. 1,03,490 என்று துவங்குகிறது. இந்தியாவில் இந்த மாடலின் விலை ரூ. 1,14,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது அதன் அறிமுக விலையை விட ரூ. 11,410 குறைவு ஆகும். இதுதவிர ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மேக்புக் ஏர் M3 மாடலின் விலையை ரூ. 93,490 என மாற்றிவிடும். விஜய் சேல்ஸ்-இல் மட்டும் இந்த மாடுக்கு ரூ. 21,410 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விலை மேக்புக் ஏர் M3 13.6 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே மாடலின் ஸ்பேஸ் கிரே நிறத்திற்கானது ஆகும்.
அமேசான் தளத்திலும் மேக்புக் ஏர் M3 மாடலின் விலை ரூ. 1,03,490 என துவங்குகிறது. இத்துடன் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது 24 மாதங்களுக்கு மாத தவணை பெறும் போது ரூ. 5250 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மேக்புக் ஏர் M3 விலையை ரூ. 99,650 என மாற்றிவிடும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…