Connect with us

latest news

அவங்க இடத்துல அவங்களையே… ஸ்டார்பக்சில் சம்பவம் செய்த இளைஞர்… என்ன தெரியுமா?

Published

on

zomato

தொழில்நுட்பத்தை கையாளுவதில் ஒருசிலர் வேற லெவலில் யோசிப்பதை நம்மில் பலரும் பல சமயங்களில் கேள்விப்பட்டிருப்போம். சிலர் இதே விஷயத்தை சொல்லியும் கேட்டிருப்போம். அப்படியான சம்பவம் ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் ஸ்டார்பக்ஸ் விற்பனை மையத்தினுள் நடந்துள்ளது. அப்படி ஸ்டார்பக்சில் என்ன நடந்திருக்கும்?

உலகம் முழுக்க ஸ்டோர்களை நடத்தி வரும் விலை உயர்ந்த குளம்பி (காஃபி) வகைகளை விற்பனை செய்து வருகிறது ஸ்டார்பக்ஸ். இந்தியாவிலும் ஸ்டார்பக்ஸ் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. அந்த வகையில், நபர் ஒருவர் ஸ்டார்பக்ஸ் சென்று இருக்கிறார். ஸ்டார்பக்சில் ஆர்டர் கொடுக்க வேண்டிய கவுன்டருக்கு சென்று தனக்கான குளம்பியை ஆர்டர் கொடுக்காமல், ஜொமேட்டோ செயலி மூலம் ஆர்டர் செய்ய முடிவு செய்தார்.

zomato 2

zomato 2

இவ்வாறு செய்ததன் மூலம் இந்த நபர் ஆர்டர் கவுன்ட்டருக்கு செல்லாமல், உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பணத்தை மிச்சம் செய்துள்ளார். ஸ்டார்பக்சில் குளம்பி ஒன்றின் விலை ரூ. 300 முதல் ரூ. 400 வரை துவங்குகிறது. ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகளில் ஸ்டார்பக்ஸ் பொருட்களை தள்ளுபடி கூப்பன்களை பயன்படுத்தி குறைந்த விலையிலும் வாங்கிட முடியும். கோல்டு சந்தாதாரர் எனில் இலவச டெலிவரியும் பெற்றுக் கொள்ள முடியும்.

டுவிட்டர் பயனரான சந்தீப் மால் தனது ஸ்டார்பக்ஸ் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். இவரது செயல் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஸ்டார்பக்ஸ் ஸ்டோருக்கு சென்ற சந்தீப் மால் ரூ. 400 மதிப்புள்ள குளம்பியை ஜொமேட்டோ மூலம் வாங்கியிருக்கிறார். இதற்கு தள்ளுபடி கூப்பன்களை பயன்படுத்திய சந்தீப் தான் ஆர்டர் செய்த குளம்பிக்கு ரூ. 190 மட்டுமே செலுத்தியுள்ளார். இவரது ஆர்டரை ஜொமேட்டோ ஊழியர் ஸ்டார்பக்ஸ் கவுன்ட்டரில் பெற்றுக் கொண்டு அதனை கடையினுள் இருந்த இவரிடமே வினியோகம் செய்துள்ளார்.

sandeep mall tweet

sandeep mall tweet

இந்த சம்பவம் நெட்டிசன்கள் பலருக்கும் ‘அடடே’ சொல்ல வைத்த நிலையில், சந்தீப் மாலை டுவிட்டரில் பின்பற்றும் நபர் அவரிடம் இவ்வாறு செய்ததற்கு ஜொமேட்டோ ஊழியரின் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த சந்தீப் மால், ஸ்டார்பக்ஸ் வரும் பலரும் இதுபோன்று செய்து கொண்டு இருப்பதால் எனக்கு இது புதிதல்ல என்று ஜொமேட்டோ டெலிவரி ஊழியர் தன்னிடம் தெரிவித்ததாக சந்தீப் மால் பதில் அளித்து இருக்கிறார்.

google news