tech news
மில்லியனில் சம்பாரிக்கும் டாப் 10 சிஇஓக்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிஇஓ… ஆனா சுந்தர் பிச்சை இல்லை!…
உலகத்தில் இருக்கும் டாப் டெக்னாலஜி கம்பெனிகளில் வேலை செய்யும் சிஇஓக்களில் அதிக சம்பளமாக மட்டுமே வருவாய் ஈட்டும் டாப் 10 லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையோ, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவோ இல்லை எனக் கூறப்படுகிறது.
பாலோ அல்டோ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சிஇஓ நிதேஷ் அரோரா. அமெரிக்காவில் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 10 சிஇஓக்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. சி சூட் காம்ப் நடத்திய கருத்துகணிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியமாக, ஏஐ உதவியுடன் கம்பெனி சிறப்பாக செயல்பட்டாலும் சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெள்ளா இப்பட்டியலில் இடம்பெறவில்லை. இப்பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கும் அரோராவுக்கு 266.4 மில்லியன் டாலர் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
டெல்லியின் ஏர் போர்ஸ் பப்ளிக் பள்ளியின் முன்னாள் மாணவர். மேலும் கூகுளின் முதன்மை பிசினஸ் ஆபிஷராகவும் இருந்து இருக்கிறார். கூகுளை விட்டு விலகி ஜப்பானில் சாப்ட்பேங்கில் வேலை செய்துவந்த நிலையில் பின்னர் பாலோ அல்டோ நிறுவனத்தில் இணைந்தார். இப்பட்டியலில் எலான் மஸ்க் 1.4 பில்லியனுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
பாலண்டிர் டெக்னாலஜியின் அலெக்ஸாண்டர் கர்ப் 1.1 பில்லியன் டாலர் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதிக வருமானம் ஈட்டுபவர்களிடையே இந்திய வம்சாவளி சிஇஓகளின் வலுவான இருப்பை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மற்றொரு சிஇஓவான அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் 44.93 மில்லியன் டாலர்களுடன் 11வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.