மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவை- மெட்டா ஏஐ 400 மில்லியன் பயனர்களை பெற்றுள்ளதாக மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருக்கிறார். தற்போது ஒவ்வொரு மாதமும் உலகம் முழுக்க 400 மில்லியனுக்கும் அதிகமானோர் மெட்டா ஏஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாராந்திர அடிப்படையில் சரியாக 185 மில்லியன் பேர் சாட்பாட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக இந்த சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, மெட்டா ஏஐ பிரபலமாகி வருகிறது. இதன் காரணமாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி மற்றும் மைக்ரோசாப்ட் கோபைலட் உள்ளிட்டவைகளுக்கு மெட்டா ஏஐ கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்டா ஏஐ உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் ஏஐ அசிஸ்டண்ட் ஆக மாற்ற வேண்டும் என்று ஜூக்கர்பர்க் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அந்த வகையில், தற்போது இந்த எண்ணிக்கை வெளியாகி இருப்பதைத் தொடர்ந்து ஆண்டு இறுதிக்குள் மார்க் ஜூக்கர்பர்க் கூறிய இலக்கை மெட்டா ஏஐ எட்டிவிடும் என்றே தெரிகிறது. தற்போது சாட்ஜிபிடி சேவையை ஒவ்வொரு வாரமும் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் ஓபன் ஏஐ நிறுவனம் தனது ஏஐ சாட்பாட் சேவையை ஒவ்வொரு வாரமும் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அறிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சாட்ஜிபிடி சேவையை உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு வருட காலத்திற்குள் இந்த எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் சாட்பாட் சேவையான மெட்டா ஏஐ தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் என பல்வேறு செயலிகளில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் எந்த செயலியை பயன்படுத்தினாலும், எளிதில் மெட்டா ஏஐ உதவியை நாட முடியும். இந்த செயலிகள் அனைத்தும் தினமும் 3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…