Connect with us

latest news

இந்த ஆண்டு ஊதிய உயர்வு கிடையாது – ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாப்ட்!

Published

on

Microsoft

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் முழு நேர ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படாது என அறிவித்து இருக்கிறது. உலகளவில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு மட்டும் ரத்து செய்யப்படும் நிலையில் ஊழியர்களுக்கு போனஸ், ஸ்டாக் அவார்டு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இந்த முடிவை தொடர்ந்து, தற்போது ஊதிய உயர்வு வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான பொருளாதார சூழலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தன.

Microsoft

Microsoft

“மாறி வரும் பொருளாதார சூழல் மற்றும் வியாபாரத்தில் கணிசமான வளர்ச்சிக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்வது என்று இருவித சவால்களை எதிர்கொள்ளும் போது எங்களது ஊழியர்கள், வியாபாரம் மற்றும் எதிர்காலம் மீது எந்த அளவுக்கு முதலீடு செய்கிறோம் என்ற விஷயத்தில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது,” என்று மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிளாட்ஃபார்மை மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வளர்ந்து வரும் போட்டி மற்றும் சீரற்ற பொருளாதார சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிதியை போனஸ் மற்றும் ஸ்டாக் அவார்டுகளை வழங்க பயன்படுத்தும். முந்தைய ஆண்டை போன்று இந்த முறை அதிக செலவீனங்களை மேற்கொள்ள முடியாது.

Microsoft

Microsoft

“எங்களது போனஸ் மற்றும் ஸ்டாக் அவார்டு பட்ஜெட்டை இந்த ஆண்டு மீண்டும் பின்பற்ற இருக்கிறோம். ஆனாலும், கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டு அதிக செலவீனங்களை மேற்கொள்ள முடியாது,” என்று மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்ஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

google news