மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனது மோட்டோ எட்ஜ் 50 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 36,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு வழங்கப்படுகிறது. விலை குறைப்பின் படி மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ விலை தற்போது ரூ. 29,999 என துவங்குகிறது. இத்துடன் HDFC வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் ரூ. 2000 தள்ளுபடி பெற முடியும்.
இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனை ரூ. 27,999 விலையிலேயே வாங்கிட முடியும். இதுதவிர எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விலை மேலும் குறையும்.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ மாடலில், 6.7 இன்ச் 1.5K pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, அதிகபட்சம் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும், 125W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் பவர் ஷேரிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு+ மேக்ரோ விஷன் சென்சார், 10MP டெலிபோட்டோ கேமரா, OIS மற்றும் 50MP குவாட் பிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…