Connect with us

tech news

விலை ரூ. 2420 தான்.. ஆப்பிளுக்கு போட்டியாக அறிமுகமான மோட்டோ Tag

Published

on

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ப்ளூடூத் சாதனம்- மோட்டோ டேக் (Moto Tag) சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ டேக் சாதனம் கூகுள் நிறுவனத்தின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் டேக் செய்யப்பட்ட பொருட்கள் உலகில் எங்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும். ஃபைண்ட் மை டிவைஸ் ஆப் பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மாடலில் அல்ட்ரா வைட்பேண்ட் (UWB) சப்போர்ட் மூலம் டேக் மிக துல்லியமாக இயங்குகிறது. எதிர்காலத்தில் ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்-லும் UWB இண்டகிரேஷன் வழங்கப்படும்.

புதிய மோட்டோ டேக்-இல் உள்ள பட்டன் கொண்டு ஏற்கனவே இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனை ரிங் செய்யவும், மோட்டோரோலா சாதனங்களை புகைப்படம் எடுக்க செய்யவும் முடியும். கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் மூலம் பயனரின் தனியுரிமையை மோட்டோ டேக் பாதுகாக்கும். இதன் மூலம் பயனரின் இருப்பிட விவரத்தை யாரும் அறிந்து கொள்ள முடியாது.

இந்த சாதனம் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும், இதன் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

மோட்டோ டேக் சாதனம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் வெளியாகிறது. இதன் விலை ஒன்றுக்கு 29 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,420 என்றும் நான்கு யூனிட்களை வாங்கும் போது 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8,260 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனம் புளூ மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

google news