Connect with us

latest news

மோட்டோ ரேசர் 40 இந்திய வெளியீடு உறுதி – அமேசானில் விற்பனைக்கு வருகிறது!

Published

on

Motorola-Razr

மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரேசர் 40 சீரிசில் ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் பேஸ் வேரியண்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரேசர் 40 அல்ட்ரா மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.

Motorola-Razr

Motorola-Razr

இரு மாடல்களிலும் முறையே 4200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 3800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளன. இந்திய சந்தையில் மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் இந்திய சந்தையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மோட்டோ ரேசர் 40 சீரிஸ் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.

ஃபெங்யா பிளாக், ஐஸ் க்ரிஸ்டல் புளூ மற்றும் மெக்னடா நிறங்களில் கிடைக்கும் மோட்டோ ரேசர் 40 சீரிஸ் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மோட்டோரோலா ரேசர் 40 மாடல் அஸ்யூர் கிரே, பிரைட் மூன் வைட் மற்றும் செர்ரி பவுடர் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Motorola-Razr

Motorola-Razr

மோட்டோரோலா ரேசர் போன்களில் 6.9 இன்ச் 1080×2640 பிக்சல் pOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரேசர் 40 அல்ட்ரா மாடலின் உள்புறம் 165Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. ரேசர் 40 மாடலில் 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 3.6 இன்ச் 1056×1066 பிக்சல் pOLED வெளிப்புற ஸ்கிரீன் உள்ளது. இதன் பேஸ் மாடலில் 1.5 இன்ச் இரண்டாவது டிஸ்ப்ளே உள்ளது.

புகைப்படங்களை எடுக்க ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 12MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் உள்ளது. ரேசர் 40 மாடலில் 64MP பிரைமரி கேமரா, 12MP சென்சார் மற்றும் அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

google news

latest news

ஐந்து நாட்களுக்கு கன மழை?…அலெர்ட் சொன்ன ஆய்வு மையம்…

Published

on

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்த நிலையில், இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இரு தினங்களாக தமிழகத்தின் சில இடங்தகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.  வட கிழக்கு பருவ மழை இன்னும் துவங்காத நிலையில் இந்த திடீர் மழை மாநிலத்தின் சில இடங்களை குளிரடையச் செய்துள்ளது. அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி முதல் வட-கிழக்கு பருவ மழை துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

Rain

Rain

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது என்றும், இந்த மழை அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் கோவை,திருப்பூர், நீலகிரி,கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய  மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

google news
Continue Reading

Cricket

வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…

Published

on

Indian Team

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு, போதிய வெளிச்சமின்மை காரணங்களால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. முதல் நாள் ஆட்டம் பாதியில் நின்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நான்காம் நாள் ஆட்டம் தடை ஏதுமின்றி இன்று முழுமையாக நடந்து முடிந்தது.

நூற்றி ஏழு ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த வங்கதேசம் தனது பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர் பங்களாதேஷ் அணியினர்.

Ind Batting

Ind Batting

இருநூற்றி முப்பத்து மூன்று ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் டுவண்டி – டுவண்டி போட்டியில் வளையாடுவதைப் போல அதிரடியாக ஆடினர்.

முப்பத்தி நான்கு புள்ளி நான்கு ஓவர்களில் இரு நூற்றி என்பத்தி ஐந்து ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடி எழுபத்தி இரண்டு ரன்களை குவித்தார். ராகுல் அறுபத்தி எட்டு ரன்களும், விராட் கோலி நாற்பத்தி ஏழு ரன்களும் எடுத்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய வங்கதேச அணி இருபத்தி ஆறு ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியை டிராவாக்க வங்கதேச அணி கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருபத்தி ஆறு ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நேரத்தில் போட்டியை வென்று வங்கதேச அணியை வாஷ்-அவுட் செய்யும் முனைப்பினை இந்திய அணி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

latest news

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி…அக்டோபர் நான்காம் தேதி ஆஜராக உத்தரவு…

Published

on

Senthil Balaji

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து,  அவர் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அமைச்சர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். உச்சநீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து நானூற்றி எழுபத்தி ஓரு  நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.

ED

ED

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தது உச்ச நீதிமன்றம். வாரம் இரு நாள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதுவும் நிபந்தனைகளில் ஒன்று. அதன்படி கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருதார் செந்தில்பாலாஜி.

இதே போல நீதிமன்ற உத்தரவின் படி திங்கட்கிழமையான இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நேற்றைய தினம் அவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில்பாலாஜி.

அமைச்சருக்கான அரசு வாகனத்தில் வராமல் தான் பயன்படுத்தும் தான் சார்ந்த வாகனத்திலே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.  இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பன மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது, இது தொடர்பன விசாரணைக்காக செந்தில் பாலாஜி இன்று ஆஜரான நிலையில் வருகிற அக்டோபர் மாதம் நான்காம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிடக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் பதினான்காம் தேதிக்கு  விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அக்டோபர் மாதம் நான்காம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

google news
Continue Reading

latest news

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

Published

on

Sathyaraj Periyar

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் துணை முதல் – அமைச்சராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது திமுகவின் வாரிசு அரசியலையே காட்டுகிறது என பாஜக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது. அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மகளிரணியின் தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு வீடியோ மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.

Udhayanidhi

Udhayanidhi

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் மானமிகு, மாண்புமிகு அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

சமூகநீதி காப்பதில் சமரசமில்லா போராளியாக திகழும் உதயநிதிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில், பெரியாரின் தொண்டனாக பெருமை கொள்கிறேன் என்றும் தனது வீடியோ மூலமான வாழ்த்துச் செய்தியில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.  முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் திரைப்படங்களில் நடித்திருந்த நடிகர் சந்தானம் நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் அது பத்து நாட்களுக்குள்  நடந்தே தீரும் என உறுதிபட சொல்லியிருந்தார்.

google news
Continue Reading

Cricket

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

Published

on

Ind vs Ban

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்கொண்டு வருகிறது இந்த அணி.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில்  பாதியில் நிறுத்தப்பட்டது முதல் நாள் ஆட்டம். ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையில் காரணமாக தடைபட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.

இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலமலவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வங்கதேச அணி.

Ind Bowling

Ind Bowling

நிறுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் போது நூற்றி ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி நான்காம் நாளான இன்று அறுபத்தி ஆறு ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இருநூற்றி ஐந்து ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சில் அதிரடி காணப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.  இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

வங்கதேச அணியின் மொனிமுல் ஹக் நூற்றி இரண்டு ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று விளையாடி வருகிறார். அவருடன் மெஹதி ஹசன் மிராஸ் ஆறு ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்து வருகிறார் உணவு இடைவேளையின் போது.

google news
Continue Reading

Trending