மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ரேசர் அல்ட்ரா ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. முன்னதாக பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனின் சில விவரங்களை லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரி யாங் யுவாங்கிங் தெரிவித்து இருந்தார். 2014 ஆண்டு மோட்டோரோலா நிறுவனத்தை விலைக்கு வாங்கிய லெனோவோ, மோட்டோ பிராண்டிங்கில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ரேசர் 2022 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய மோட்டோரோலா ரேசர் அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் பெரிய வெளிப்புற டிஸ்ப்ளே இருக்கும். இதே போன்ற டிசைன் கொண்ட மாடல்களை போட்டி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
மோட்டோரோலா ரேசர் அல்ட்ரா ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை டிப்ஸ்டரான எவான் பிலாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன், சமீபத்திய ஃபோல்டபில் மாடல்களில் இல்லாத அளவுக்கு சற்றே பெரிய வெளிப்புற டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
புதிய மோட்டோரோலா ரேசர் அல்ட்ரா மாடலின் வெளிப்புற டிஸ்ப்ளே பேனலில்: மேப் நேவிகேஷன், மியூசிக், ஆஃப்லைன் கேமிங், நோட்டிஃபிகேஷன் அக்சஸ் போன்ற அம்சங்களை இயக்க முடிகிறது. ஃப்ளிப் கவர் முழுக்க ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் இரண்டு கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிலாஷ் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
மோட்டோரோலா ரேசர் அல்ட்ரா அம்சங்கள்:
6.9 இன்ச் Full HD+ 2640×1080 பிக்சல் pOLED டிஸ்ப்ளே
3.5 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ்.
13MP பிரைமரி கேமரா
32MP செல்ஃபி கேமரா, 8MP கூடுதல் சென்சார்
3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…