Connect with us

latest news

மூன்று ABS மோட்களுடன் புதிய ஹீரோ XPulse 200 4V இந்தியாவில் அறிமுகம்

Published

on

2023-Hero-XPulse-200-4V

ஹீகரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய XPulse 200 4V இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹீரோ XPulse 200 4V விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இத்துடன் இதே மாடலின் ப்ரோ வேரியண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஹீரோ XPulse 200 4V மாடல் புதிய OBD2 விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மோட்டார் E20 ரக எரிபொருள், அதாவது 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளிலும் இயங்கும். இந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் உயரமான விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கின் முன்புறம் எல்இடி ப்ரோஜெக்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

2023-Hero-XPulse-200-4V

2023-Hero-XPulse-200-4V

ஹீரோ XPulse 200 4V மாடலில் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த பைக்கில், மூன்று ABS மோட்கள்- ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி வழங்கப்பட்டுள்ளன. சிங்கில் சேனல் ABS சிஸ்டத்திலேயே இதில் உள்ள ABS, ரோடு மோடில் சீராக இயங்கும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது. ஆஃப் ரோடு மோடில், ABS இயக்கம் சற்றே குறைவாக இருக்கும். இதனால் ஆஃப் ரோடு பிரேக்கிங்கில் அதிக கண்ட்ரோல் கிடைக்கும். ரேலி மோடில் இருக்கும் போது முன்புற வீலுக்கான ABS முழுமையாக ஆஃப் செய்யப்பட்டு விடும். இது மிகவும் அனுபவம் மிக்க ரைடர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

புதிய XPulse 200 4V மாடலில் முந்தைய ரேலி வெர்ஷனை, ப்ரோ வேரியண்ட் என்று ரிபிராண்டு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் இருபுறமும் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன்கள், உயரமான சீட், ஹேண்டில்பார் ரைசர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நீட்டிக்கப்பட்ட கியர் லீவர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆஃப் ரோடு பூட்களுடன் மோட்டார்சைக்கிளை ஓட்ட சவுகரியமானதாக மற்றுகிறது. இதில் உள்ள நீண்ட சைடு ஸ்டாண்டுகள் பைக் தரையில் நிலையாக நிறப்தை உறுதி செய்கிறது.

2023-Hero-XPulse-200-4V

2023-Hero-XPulse-200-4V

இந்திய சந்தையில் புதிய ஹீரோ XPulse 200 4V மாடல்- மேட் நெக்சஸ் புளூ, டெக்னோ புளூ, பிளாக் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் ரேலி எடிஷன் கிராஃபிக்ஸ் என்று நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் அடுத்த சில நாட்களில் துவங்கி விடும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *