நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புது இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது இயர்பட்ஸ் நாய்ஸ் பட்ஸ் VS102 எலைட் என அழைக்கப்படுகிறது. மெல்லிய டிசைன், அதிநவீன தோற்றம் கொண்ட புது இயர்பட்ஸ் க்ரோம், மேட் பினிஷ் கொண்டுள்ளது. இது இயர்பட்ஸ்-க்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
இந்த இயர்பட்ஸ்-இல் 11 மில்லிமீட்டர் டிரைவர்கள் உள்ளன. இது தெளிவான ஆடியோ மற்றும் சிறப்பான பேஸ் வழங்குகிறது. இதில் உள்ள குவாட் மைக் மற்றும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்குகிறது. இது அழைப்புகளின் போது பின்னணியில் உள்ள சத்தத்தை பெருமளவுக்கு குறைக்கும்.
புதிய நாய்ஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்கும். இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்களுக்கு பயன்படுத்த செய்யும் என நாய்ஸ் தெரிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
இது Hands-free காலிங், 50ms வரையிலான லோ லேடன்சி வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சப்போர்ட் கொண்டுள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை வைத்திருப்போரும் இதனை சிரமமின்றி பயன்படுத்த முடியும். இத்துடன் IPX5 தரச் சான்று பெற்ற ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் நாய்ஸ் VS102 எலைட் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக், பெய்க், கிரீன் மற்றும் பர்ப்பில் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை கோநாய்ஸ் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…