Categories: latest newstech news

விலை ரூ. 1,299 தான் – UPI சப்போர்ட் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்!

ஃபீச்சர் போன் மாடல்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு சமீப காலங்களில் பெருமளவு குறைந்துவிட்டது. எனினும், ஃபீச்சர் போன் மாடல்கள் விற்பனைவதில்லை என்ற நிலை இந்திய சந்தையில் இன்னும் உருவாகவில்லை. இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து ஃபீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

அதன்படி நோக்கியா 105 (2023) மற்றும் நோக்கியா 106 4ஜி பெயர்களில் இரண்டு புதிய ஃபீச்சர் போன்களை ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் செய்திருக்கிறது. இரு மொபைல் போன்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக யுபிஐ (UPI) சப்போர்ட் உள்ளது. இதன் காரணமாக பயனர்கள் இந்த மொபைல் போன்களை கொண்டு இணைய வசதி இல்லாமலேயே உடனடி பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

Nokia-105-(2023)

நோக்கியா 105 (2023) மற்றும் நோக்கியா 106 4ஜி அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 105 (2023) மாடலில் 1.8 இன்ச் TFT LCD ஸ்கிரீன், 120×160 பிக்சல் ரெசல்யூஷன், 1000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேரத்திற்கு டாக்டைம், 22 நாட்களுக்கு ஸ்டாண்ட் பை வழங்குகிறது.

நோக்கியா 106 4ஜி மாடலில் 1.8 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் முழு சார்ஜ் செய்தால் ஸ்டாண்ட் பை மோடில், சில வாரங்கள் வரை தாக்குப்பிடிக்கும். இரு மொபைல் போன்களையும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்துவிட முடியும். இத்துடன் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு உள்ளது.

இரு மாடல்களிலும் சீரிஸ் 30+ (S30+) ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒஎஸ் நோக்கியா ஃபீச்சர் போன் மாடல்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு சாதனங்களும் IP52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கின்றன. இத்துடன் வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ வசதி உள்ளது. இதன் காரணமாக மொபைல் போனில் ஹெட்செட்-ஐ செருகாமல் எஃப்.எம். ரேடியோவை இயக்க முடியும்.

Nokia-105-(2023)

இத்துடன் நோக்கியா 106 4ஜி மாடலில் MP3 ஃபைல்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மொபைலில் மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு பாடல் மற்றும் ஆடியோக்களை கேட்க முடியும்.

நோக்கியா 105 (2023) மாடல் சார்கோல், சியான் மற்றும் ரெட் டெரகோட்டா என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 ஆகும். நோக்கியா 106 4ஜி மாடல் சார்கோல் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago