tech news
க்யூட் லுக்கில் புது நோக்கியா போன்கள் இந்தியாவில் அறிமுகம்
நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி ஃபீச்சர் போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் 2.8 இன்ச் IPS LCD ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் 9.8 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகின்றன. இந்த இரு போன்களிலும் UPI பரிவர்த்தனை, கிளவுட் செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளது.
இதன் கிளவுட் செயலிகளை கொண்டு பயனர்கள் பொழுதுபோக்கு, வியாபாரம் மற்றும் கல்வி சார்ந்த தகவல்களை பிரவுஸ் செய்ய முடியும். இத்துடன் நோக்கியாவின் பெயர்போன ஸ்னேக் கேம் (Snake Game) இரு மாடல்களிலும் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி மாடல்களின் 2024 வேரியண்டில் 2.4 இன்ச் QVGA IPS LCD ஸ்கிரீன், யுனிசாக் T107 பிராசஸர், 64MB ரேம், 128MB மெமரியுடன் கிடைக்கின்றன. இத்துடன் மெமரியை 32GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இரு மாடல்களிலும் S30+ ஓ.எஸ். உள்ளது. நோக்கியா 220 4ஜி மாடலில் LED டார்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 235 4ஜி 2024 மாடலில் 2MP பிரைமரி கேமரா உள்ளது. இரு மாடல்களிலும் 1250mAh பேட்டரி, USB C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
2024 நோக்கியா 220 4ஜி மாடலின் விலை ரூ. 3,249 என்றும் 2024 நோக்கியா 235 4ஜி மாடலின் விலை ரூ. 3,749 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா 220 4ஜி பிளாக், பீச் நிறங்களில் கிடைக்கிறது. நோக்கியா 235 4ஜி மாடல் பிளாக், புளூ மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.
இரு மாடல்களின் விற்பனை அமேசான், ஹெச்.எம்.டி. இந்தியா வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.