latest news
அட்டகாசமான புதிய நிறங்களில் Relaunch செய்யப்பட்ட நோக்கியா 2660 ஃப்ளிப் போன்
நோக்கியா 2660 ஃப்ளிப் போனின் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் மூன்று வெவ்வேறு நிறங்களில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் 2023 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மிக சொற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், நோக்கியா 2660 ஃப்ளிப் மாடலின் பெரும்பாலான அம்சங்கள் அப்படியே வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2660 ஃப்ளிப் மாடல்- பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று விதமான நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 2023 நோக்கியா 2660 ஃப்ளிப் போன் லஷ் கிரீன் மற்றும் பாப் பின்க் என இரண்டு நிறங்களில் கிடக்கிறது. அந்த வகையில் புதிய நிறங்கள் சேர்க்கும் பட்சத்தில் நோக்கியா 2660 மாடல் மொத்தத்தில் ஐந்து நிறங்களில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
நோக்கியா 2660 ஃப்ளிப் போன் அம்சங்கள்
2.8 இன்ச் QVGA பிரைமரி டிஸ்ப்ளே
கவர் பேனலில் 1.77 இன்ச் இரண்டாவது டிஸ்ப்ளே
0.3MP VGA கேமரா, எல்இடி ஃபிளாஷ்
யுனிசாக் T107 பிராசஸர்
48எம்பி ரேம்
128எம்பி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசசதி
S30 பிளஸ் பிராசஸர்
1450 எம்ஏஹெச் பேட்டரி
2.75 வாட் சார்ஜிங் சப்போர்ட்
மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்
ப்ளூடூத் 4.2
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 2660 ஃப்ளிப் போனின் புதிய வேரியண்ட் விலை 64.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 ஆயிரத்து 661 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு நோக்கியா 2660 மாடல் ரூ. 4 ஆயிரத்து 699 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2023 நோக்கியா 2660 மாடல் இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.