latest news
ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் – கூடவே இவ்வளவு சலுகைகளா?
நோக்கியா பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா C22 எனும் பெயரில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தது. புதிய நோக்கியா C22 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, HD+ ரெசல்யுஷன், ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ், 13MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன.
நோக்கியா C22 அம்சங்கள்:
6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 1600×720 பிக்சல் ரெசல்யுஷன்
யுனிசாக் SC9863A ஆக்டா கோர் பிராசஸர்
IMG8322 GPU
2 ஜிபி, 4 ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ்
13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்
2MP மேக்ரோ சென்சார்
8MP செல்ஃபி கேமரா
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங் வசதி
பின்புறம் கைரேகை சென்சார்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா C22 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், சேண்ட் மற்றும் பர்பில் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ பிளஸ் வாடிக்கயைளர்கள் ரூ. 399 திட்டத்தை தேர்வு செய்யும் போது அசத்தல் பலன்கள் வழங்கப்படுகிறது. அதன்படி 75 ஜிபி மாதாந்திர டேட்டா மற்றும் மூன்று ஆட்-ஆன் சிம்கள் வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 மதிப்புள்ள பலன்கள், அதாவது 100 ஜிபி கூடுதல் டேட்டா, ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்புள்ள கூப்பன்கள் என்று பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.