சமூகத்தில் பல மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டுதான் மொபைல்களை வெளியிடிகின்றன. தங்களின் சிறப்பம்சங்களை காட்டி தங்கள் நிறுவனத்திற்கு என தனி பெயரை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக உள்ளன. சில நாட்களுக்கு முன் பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ அவர்களின் ஜியோ பாரத் மொபைல் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தின.
அதைபோல் தங்களின் தரத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்த நோக்கியா நிறுவனம் தற்போது தங்களது தயாரிப்பில் உருவான இருவித மொபைல் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புது வகை மொபைல் போன்களானது Nokia 110 2G, Nokia 110 4G என்ற இரு மாடல்களில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மொபைல்களான கையில் அடக்கமாய் வைத்து கொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமக்கு முன் காலத்தில் இருந்த மொபைல்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த மொபைல்களில் அடிப்படையான வசதிகள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த வகை போன்களில் நவீன காலத்திற்கு தேவைப்படும் பலவித வசதிகளும் அடங்கியுள்ளன.
இந்த வகை மொபைல்களின் மூலம் நாம் UPI Payment-களை மிக எளிதான முறையில் Scan & Pay என்ற வசதியின் மூலம் பெற்று கொள்ளலாம். மேலும் Nokia 110 2G மொபைலானது 1000mAh பேட்டரி அமைப்புடனும் Nokia 110 4G மொபைலானது 1450mAh பேட்டரி அமைப்புடனும் வெளிவந்துள்ளது. இதன் IP52 வாட்டர் ரெஸிஸ்டெண்ட்ஸ் தன்மை இதனை 12 நாட்களுக்கு சார்ஜ் போகாமலும் 8 மணி நேரத்திற்கு கால்களை பேசும்படியுமான அமைப்பையும் கொடுக்கிறது.
Nokia 110 4G மொபைலானது ’மிட்நைட் ப்ளூ’ மற்றும் ’ஆர்க்டிச் பர்புல்’ என இரு வண்ணங்களிலும் Nokia 110 2G மொபைலானது ‘சார்க்கோல்’ மற்றும் ’கிளொவ்டி ப்ளூ’ என இருவித வண்ணங்களிலும் கிடைகின்றது.
விலை:
Nokia 110 2G மொபைல் ரூ1,699க்கும் Nokia 110 4G மொபைல் ரூ.2,499க்கும் சந்தையில் கிடைக்கபெறும். இதனை நாம் அனைத்து நோக்கியா வெப்சைட்டிலும் மற்றும் ஆன்லைனிலும் வாங்கி கொள்ளலாம்.
சமீபத்தில் பிரபல ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் என்ற 4ஜி மொபைலை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களுக்கும் மக்களிடையே நல்ல ஒரு போட்டி நிகழும் என எதிபார்க்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…