Categories: latest newstech news

யாரும் எதிர்பார்க்காத மலிவான விலையில்… நோக்கியாவின் புது 5ஜி ஸ்மார்ட்போன்…!

இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில் 5G இணைப்பை ஆதரிக்கும் மற்றும் நவீன அம்சங்களுடன் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது என்பது ஒரு கடினமான வேலையாக தான் இருக்கின்றது. இருப்பினும் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. குறைந்த செலவில் 5g நெட்வொர்க்கை தேடும் பயனாளர்களுக்கு nokia ஒரு புதிய தேர்வாக இருக்கும்.

அதாவது நோக்கியா மேட்ச் ப்ரோ என்று செல்போனை வெளியிட்டுள்ளது. இந்த செல்போனில் முக்கிய அம்சங்கள், பேட்டரி, கேமரா, விலை ஆகியவற்றை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நோக்கியா மேட்ச் ப்ரோவில் பல தனித்துவமான அம்சங்கள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் AMOLED திரையுடன் வருகிறது. இது பிரகாசமான மற்றும் தெளிவான வண்ணங்களை வழங்குகிறது.

மேலும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன், பயனர்கள் மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் டச் ஸ்கிரீன் அனுபவத்தை கொடுக்கின்றது. இது கேமிங்கில் ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த செல்போனாக இருக்கும். இதற்கு அடுத்ததாக நாம் பார்க்கப்போவது பேட்டரி.  பேட்டரி ஆயுள் என்பது ஸ்மார்ட் போனின் முக்கிய அம்சம். நோக்கியா மேட்ச் ப்ரோ 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இந்த வலுவான பேட்டரி திறன் பயனர்கள் ரீசார்ஜ் செய்வதைப் பற்றி அடிக்கடி கவலைப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பேட்டரியின் தனிச்சிறப்பு அதன் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் ஆகும். 55W வேகமான சார்ஜர் மூலம், நோக்கியா மேட்ச் ப்ரோ வெறும் 25 நிமிடங்களில் 0% முதல் 100% வரை சார்ஜ் செய்ய முடியும். இது நேரத்தை கணிசமாகக் குறைத்து நாள் முழுவதும் உங்களை ஹாப்பியாக வைத்திருக்க உதவும்.

அடுத்ததாக இந்த செல்போனின் கேமரா தரம் பலரையும் ஆச்சரியப்படும் வைக்கும் வகையில் உள்ளது. நோக்கியா மேட்ச் ப்ரோ 200 மெகாபிக்சல் கேமராவை கொண்டு இருக்கிறது. பின்புறத்தில் 200 மெகாபிக்சல் பிரதான கேமராவும் அத்துடன் இரண்டு மெகாபிக்சர் அல்ட்ரா ஒயிட் ஆங்கிள் கேமராவையும் இது கொண்டுள்ளது. மேலும் செல்ஃபி பிரியர்களுக்காக முன் கேமராவில் 64 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

இதன் மூலம் செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு சிறந்த தரத்தை கொடுக்க முடிகின்றது. இந்த கேமரா 4k வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. உயர்தர வீடியோவை உருவாக்க விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்ததாக இருக்கும். மேலும் நோக்கியா மேட்ச் ப்ரோ 100 ஜூம் வசதி கொண்டுள்ளது. இதைவைத்து பயனாளர்கள் தொலைதூர விஷயங்களை சிறந்த முறையில் படம் பிடிக்க முடியும்.

நோக்கியா மேட்ச் ப்ரோ இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல இதன் விலைவும் பலரையும் கவனத்தில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை 10 ஆயிரம் முதல் 15000 வரை குறைய வாய்ப்பிருக்கின்றது. விளம்பர சலுகையின் போது இந்த ஸ்மார்ட் போனை நாம் 8000 முதல் 11 ஆயிரம் வரை வாங்கலாம். இது ஒரு பட்ஜெட் செல்போனாக இருக்கும். இந்த சாதனத்தை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் இஎம்ஐ விருப்பங்களையும் தேர்ந்தெடுக்கலாம். பயனாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நோக்கியா மேட்ச் ப்ரோ செல்போனை வாங்கலாம்.

Ramya Sri

Recent Posts

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

9 mins ago

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

2 hours ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

2 hours ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago