Connect with us

latest news

நத்திங் போன் 2  குறைந்த விலையில் வாங்கிடலாம்.. எப்படி தெரியுமா?

Published

on

Nothing-Phone-2-Featured-img

நத்திங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று நத்திங் போன் 2 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. இந்தியாவில் புதிய நத்திங் போன் 2 விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 2 5ஜி மாடலை சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

இந்தியாவில் நத்திங் போன் 2 முதல் விற்பனை ஜூலை 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அந்த வகையில், புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்பாக நத்திங் போன் 2 மற்றும் இதற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் அறிமுக சலுகை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

Nothing-Phone-2

Nothing-Phone-2

விலை மற்றும் அறிமுக சலுகைகள் :

நத்திங் போன் 2 மாடல் இந்திய சந்தையில் ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும், பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும். ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி நத்திங் போன் 2 மாடலை வாங்கும் போது இதன் விலை ரூ. 41 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3 ஆயிரம் குறைந்துவிடும்.

Nothing-Phone-2-1

Nothing-Phone-2-1

இந்த சலுகை நத்திங் போன் 2 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டிற்கானது ஆகும். இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 49 ஆயரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வங்கி சலுகையை சேர்க்கும் பட்சத்தில் இதன் விலை ரூ. 46 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

நத்திங் போன் 2 – ஐந்து முக்கிய விவரங்கள் :

நத்திங் போன் 2 மாடலில் ஃபிளாக்‌ஷிப் தர பிராசஸர் உள்ளது. இந்த மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் அதிவேகமானது ஆகும். ஏற்கனவே பல்வேறு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் இந்த சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய நத்திங் போன் 2 வாங்குவோருக்கு நீண்ட காலம் மென்பொருள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனில் தற்போது ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

Nothing-Phone-2-2

Nothing-Phone-2-2

இந்த ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15 வாட் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் 5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை. இதனால் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர், தனியே சார்ஜர் வாங்க வேண்டும்.

நத்திங் போன் 2 மாடலில் பிரத்யேகமான செமி-டிரான்ஸ்பேரன்ட் டிசைன், 6.7 இன்ச் Full HD + OLED, LTPO பேனல், 1Hz முதல் 120Hz வரை வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள் உள்ளன. இதனை பயனர்கள் ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷனுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க நத்திங் போன் 2 மாடலில் 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

google news