தொழில்நுட்ப உலகில் வளர்ந்து வரும் நிறுவனமான நத்திங், தனது முதல் ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதையொட்டி, இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை ஒவ்வொன்றாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலின் விற்பனை தேதி, சலுகை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நத்திங் போன் 2 மாடலை ஆஃப்லைன் சந்தையில் வாங்குவோருக்கு வழங்கப்பட இருக்கும் சலுகை, விற்பனை தேதி உள்ளிட்டவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
முன்பதிவு விவரம் :
நத்திங் போன் 2 மாடலின் முன்பதிவு ஜூலை 12 ஆம் தேதி துவங்கி ஜூலை 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், முன்பதிவு கட்டணமாக ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தியாவில் நத்திங் போன் 2 மாடலை விற்பனை செய்ய இருக்கும் ரிடெயிலர்களுக்கு, ஜூலை 13 ஆம் தேதியில் இருந்து யூனிட்கள் கிடைக்கும். ஜூலை 15 ஆம் தேதி மாலையில் இருந்து நத்திங் போன் 2 ரிடெயில் விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும்.
சலுகை விவரங்கள் :
நத்திங் போன் 2 மாடலை வாங்குவோருக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் படி நத்திங் போன் 2 வாங்குவோர், நத்திங் இயர் ஸ்டிக் மாடலை ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் பல்வேறு அக்சஸரீக்களுக்கு தள்ளுபடி மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. அடாப்டருக்கு 50 சதவீதம், கேஸ்-க்கு 40 சதவீதம், ஸ்கிரீன் கார்டுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை வைத்திருப்போருக்கு ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், எந்தெந்த வங்கி கார்டுகளுக்கு இது பொருந்தும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் :
நத்திங் போன் 2 மாடலில் 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP சோனி IMX890 பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP சாம்சங் JN1 அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 32MP சோனி IMX615 செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0 கொண்டிருக்கிறது. மேலும், மூன்று ஆண்டுகள் ஒ.எஸ். அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்கிரேடுகள் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், அலுமினியம் ஃபிரேம், IP சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…