நத்திங் நிறுவனத்தின் போன் 2 மாடலுக்கான டீசர்கள் முதல்முறையாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 (MWC 2023) நிகழ்வில் வெளியிடப்பட்டன. அப்போதே இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் தர ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றிய டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி சர்வதேச சந்தையில் இந்த மாடல் கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யகேமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
இன்னமும் அறிமுக தேதிக் கூட அறிவிக்கப்படாத நிலையில், நத்திங் போன் 2 மாடலின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்பதை விவரிக்கும் ரெண்டரும் வெளியாகி உள்ளது. இந்த ரெண்டர் நத்திங் வெளியிட்ட டீசர் படத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி அல்லது 12 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128 ஜிபி அல்லது 256 ஜிபி UFS 3.1 மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை இந்த மாடலில் 6.55 இன்ச் AMOLED பேனல், Full HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள்- பெரும்பாலும் ஒன்று அல்ட்ராவைடு லென்ஸ், மற்றொரு சென்சார் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. போன் 2 மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், என்எஃப்சி வசதியும், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 1.5 வழங்கப்படவுள்ளது.
புதிய நத்திங் போன் 2 மாடலில் பிரீமியம் பாடி மற்றும் கிளாஸ் டிசைன், ஸ்மார்ட்போனை சுற்றி அலுமினியம் ஃபிரேம் வழங்கப்படும் என்று இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…