tech news
3 ஹவரில் மைல்கல் எட்டிய CMF போன் 1 – ஷாம்பூ பாக்கெட் கணக்கில் விறுவிறு விற்பனை
நத்திங் நிறுவனத்தின் துணை பிரான்ட் CMF சில தினங்களுக்கு முன் தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. CMF போன் 1 என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகமானது. அறிமுக நாளில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட CMF போன் 1, நேற்று மதியம் விற்பனைக்கு வந்தது.
வெளியீட்டுக்கு முன்பிருந்தே CMF போன் 1 மாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நத்திங் போன்றே இந்த பிரான்ட் தனது ஸ்மார்ட்போன் டிசைனை வித்தியாசமாகவும், கூடுதல் வசதிகளையும் வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், CMF போன் 1 மாடல் விற்பனை துவங்கிய மூன்று மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக நத்திங் தெரிவித்துள்ளது.
இந்த விவரங்கள் விற்பனை முடிந்த 24 மணி நேரத்திற்கு பிறகு தான் தெரியவந்துள்ளது. முன்னதாக நத்திங் நிறுவனம் அறிமுகப்படுத்திய நத்திங் 2a ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கிய 60 நொடிகளில் 60,000 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை கடந்த மார்ச் மாதம் துவங்கியது.
இந்திய சந்தையில் புதிய CMF போன் 1 மாடலின் விலை ரூ. 15,999 என துவங்குகிறது. CMF போன் 1 அக்சஸரீக்கள் விலை: கேஸ் ரூ. 1499, ஸ்டான்டு, லேன்யார்டு மற்றும் கார்டு கேஸ் உள்ளிட்ட ஒவ்வொன்றும் ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
CMF போன் 1 உடன் அறிமுகம் செய்யப்பட்ட CMF வாட்ச் 2 ப்ரோ விலை ரூ. 4999 என்று துவங்குகிறது. இத்துடன் வெளியிடப்பட்ட வாட்ச் 2 ப்ரோ பெசல் + ஸ்டிராப் செட்-இன் விலை ரூ. 749 ஆகும்.
அறிமுக சலுகைகள்:
முதல் நாள் விற்பனையின் போது CMF போன் 1 விலை ரூ. 14,999 என துவங்கியது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 16,999 என துவங்கியது.
ப்ளிப்கார்ட் தளத்தில் CMF போன் 1 வாங்குவோர், CMF பவர் 33W சார்ஜரை ரூ. 799 விலையில் வாங்கிட முடியும். இதன் உண்மை விலை ரூ. 1299 ஆகும். எனினும், ஸ்மார்ட்போன் வாங்கிய முதல் 60 நாட்களுக்குள் இந்த சார்ஜரை ரூ. 699-க்கு வாங்கிடலாம்.
இதேபோன்று ப்ளிப்கார்ட் தளத்தில் CMF போன் 1 வாங்குவோர், CMF வாட்ச் ப்ரோ 2 மற்றும் CMF பட்ஸ் ப்ரோ 2 மாடல்களை வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி பெறலாம். இந்த சாதனங்கள் ப்ளிப்கார்ட், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் பல தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.