Connect with us

latest news

என்ன என்ன ஐட்டங்களோ…! புது OnePlus மொபைல் போனிலே… வாங்கிப்பார்த்தால் தெரிந்து விடும்…!

Published

on

ஒன் பிளஸ் செல்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாக போகின்றது. இது தொடர்பான தகவலை தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே 70 ஆயிரம் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட் போன் தற்போது மிட்-ரேன்ஜ்  பிரிவின்கீழ் 40 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கின்றது. இந்த ஸ்மார்ட் போன் எப்போது லாஞ்ச் ஆகின்றது. அதன் முக்கிய அம்சங்கள், விலை குறித்த தகவலை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

ஒன் பிளஸ் 13, ஏற்கனவே 70 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது oneplus 13r ஸ்மார்ட்போனை பற்றி தான் இதில் பார்க்கப் போகின்றோம். ஒன் பிளஸ் 12r  ஸ்மார்ட்போனின் அப்கிரேட் வெர்ஷனாக தான் இந்த oneplus  13r செல்போன் அறிமுகமாக இருக்கின்றது.

ஒன் பிளஸ் 12ஆர் மாடலை போலவே பிரீமியம் மற்றும் மிட் ரென்சு பிரிவில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. தற்போது வரை oneplus 12 ஆர் நல்ல முறையில் விற்பனையாகி வருகின்றது. இதனால் oneplus 13ஆர் ஸ்மார்ட்போனும் மிகச்சிறந்த வரவேற்பை பெரும் என்று நம்புகிறார்கள்.

ஒன்பிளஸ் 13 ஆர் செல்போன் சிறப்பம்சங்கள்:

டிப்ஸ்டர் டிஜியால் சாட் ஸ்டேஷன் நிறுவனம் இந்த பெயரை வெளியில் சொல்லாமல் அதன் முக்கிய அம்சங்களை மட்டும் பகிர்ந்து இருக்கின்றது. அதன்படி இதில் 1.5கே டிஸ்ப்ளேவை பேக் செய்யும்.

இது குவால்காம் SM8750 சிப்செட் மூலம் இயங்குகின்றது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஏஜன் 2 சிப்செட் ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி சோனி IMX906 ப்ரைமரி கேமரா மற்றும் 50எம்பி சாம்சங் JN1 டெலிஃபோட்டோ கேமராவை கொண்டிருக்கலாம். இது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரிஸில் பயன்படுத்தப்பட்ட கேமரா செட்டப் என்று கூறுகிறார்கள்.

ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஐ காட்டிலும் புதிய மாடல் டெலிஃபோட்டோ சென்சார் உடன் மிகப்பெரிய அப்கிரேட்-ஐ காணவுள்ளது. பேட்டரியிலும் நல்ல மேம்பாட்டை காணலாம்.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படலாம். இது ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் இருக்கும் 5,500mAh பேட்டரியை விட அதிகமாக இருக்கும்.

இந்த செல்போன் ஒன் பிளஸ் s5 என்கின்ற பெயரில் சீனாவில் அறிமுகம் ஆகி இருக்கின்றது. பின்னர் இது இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகின்றது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த செல்போன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இது 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் விலையில் அறிமுகமாகும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே வெளியான oneplus 12ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 37,999க்கு விற்பனையாகி வரும் நிலையில் oneplus 13ஆர் மாடல் அதிகபட்சம் 45 ஆயிரம் வரை விற்பனையாகலாம் என்று கூறி வருகிறார்கள்.

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *