tech news
ஸ்கிரீன் பிரச்சினை இருக்கா? Free-யா சரி செய்றோம்.. ஒன்பிளஸ்
ஒன்பிளஸ் நிறுவனம் தனது டிஸ்ப்ளேக்களில் கிரீன் லைன் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு துவங்கி ஒன்பிளஸ் டிஸ்ப்ளேக்களுக்கு வாழ்நாள் முழுக்க வாரண்டி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட குறிப்பிட்ட மாடல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொடுப்பதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. சமீப ஆண்டுகளில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் ஸ்கிரீனில் ஏற்பட்ட கிரீன் லைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இந்த அறிவிப்பை ஒன்பிளஸ் வெளியிட்டு உள்ளது.
ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் லாயல்டி திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களும் இடம்பெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் லாயல்டி திட்டத்தில் இடம்பெற்று இருக்கிறது. இது குறித்த ஸ்கிரீன்ஷாட் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஒன்பிளஸ் சர்வீஸ் வழங்குவோரிடம் இலவச ஸ்கிரீன் சர்வீஸ் செய்வது தொடர்பாக அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டம் குறிப்பாக ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை குறிவைத்தே அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டம் மேலும், சில பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.