latest news
பட்ஜெட் விலையில் விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் நார்டு 3?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒன்பிளஸ் நார்டு 3 மாடல் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இந்த ஸ்மார்ட்போன் பெயரை ஒன்பிளஸ் வலைதளத்தின் சோர்ஸ் கோட்-இல் கண்டறிந்துள்ளார். மேலும் அதன் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று கொடுக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி நார்டு 3 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மற்றொரு டிப்ஸ்ட்ரான யோகேஷ் ரார் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் இன்னும் 6 முதல் 8 வார காலத்திற்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்பிளஸ் தரப்பில் புதிய நார்டு 3 அறிமுகம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
ஒன்பிளஸ் நார்டு 3 மாடலில் 6.7 இன்ச் Full HD+ ரெசல்யுஷன் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்ப்ளே டிசைன், அதிக ரிப்ரெஷ் ரேட், 50MP சோனி IMX766 பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது லென்ஸ், 2MP டெரிடரி சென்சார் என மூன்று கேமரா லென்ஸ்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் நார்டு சீரிசில் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் அல்லது 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை இதே பட்ஜெட்டில் நிர்ணயம் செய்து வருகிறது. முந்தைய ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் அதன் பின் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நார்டு 2T விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.