Categories: tech news

₹3000 முழுசா தள்ளுபடி.. ஒரு ஒன்பிளஸ் போன் பார்சல்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடல் நார்ட் 4 கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான நார்ட் 4 ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 120Hz டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 23 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

விலை குறைப்பு விவரங்கள்:

இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் 8GB+128GB, 8GB+256GB, மற்றும் 12GB+256GB மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 29,999, ரூ. 32,999 மற்றும் ரூ. 35,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது விலை குறைப்பின் படி நார்ட் 4 பேஸ் வேரியண்ட்டை ஐசிஐசிஐ மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் குறைந்து விலை ரூ. 27,999 என்று மாறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8GB+256GB மற்றும் 12GB+256GB மெமரி மாடல்களை இதே கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ. 3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதனால் இவற்றின் விலை முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 32,999 என மாறுகிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளத்தில் குறைந்த விலையில் வாங்கிடலாம்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago