Connect with us

tech news

பட்ஜெட் விலையில் புது Nord சீரிஸ் போன்.. வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published

on

ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் சீரிஸ் போன்களை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த ஏப்ரல் மாதம் நார்ட் CE 4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷனை நார்ட் CE 4 லைட் 5ஜி பெயரில் ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. புதிய நார்ட் CE 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய நார்ட் CE 4 லைட் 5ஜி மாடல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பயனர்களின் அன்றாட இன்னல்களுக்கு தீர்வு காணும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. டிசைனை பொருத்தவரை நார்ட் CE 4 லைட் 5ஜி மாடல் தோற்றத்தில் நார்ட் CE 4 போன்றே காட்சியளிக்கும்.

அம்சங்களை பொருத்தவரை நார்ட் CE 4 லைட் 5ஜி மாடலில் 120Hz AMOLED டிஸ்பிளே, கைகள் ஈரமாக உள்ள போதும் பயன்படுத்தும் வகையில் அக்வாடெக் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இவைதவிர இந்த ஸ்மார்ட்போனின் பிராசஸர், அளவீடுகள், கேமரா உள்ளிட்ட அம்சங்கள் பற்றிய தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

google news