open ai
AI தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் கூகுள் போன்ற சர்ச் இன்ஜினை பயன்படுத்தினோம். ஆனால் இன்று அதற்கும் மேலே AI-தொழில்நுட்பம் கோலோற்றி வருகிறது. மக்கள் தங்களின் தேவைகளை பெறுவதற்காகவும் தினசரி நிகழக்கூடிய சந்தேகங்கள் போன்றவற்றைக் கேட்டு தெரிந்து, AI மூலம் தீர்வுகளை பெறுகின்றனர்.
இன்று மனிதர்கள் செய்ய முடியாத பல வேலைகளை AI தொழில்நுட்பம் செய்வதால் AI தொழில்நுட்பம் அறிவியல் வளர்ச்சியின் சாதனை சாதனைதான். இருந்தாலும் மனிதர்களுக்கு தற்சமயம் ஆபத்தை தான் கொடுத்து வருகிறது. இன்று பல மென்பொருள் நிறுவனங்களில் மனிதர்களுக்கு பதிலாக AI தான் வேலை செய்து வருகிறது. குறிப்பாக சீனாவில் மனிதர்களே இல்லாத பல நிறுவனங்கள் AI மூலம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஒருபுறம் தொழில்நுட்ப புரட்சியாக இருந்தாலும் மறுபுறம் இது வேலையின்மை திண்டாட்டத்தை உருவாக்கி மக்களின் அச்சத்தை நாளுக்கு நாள் கூட்டி தான் வருகிறது. மேலும் இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் லேப்டாப் போன்ற சாதனங்களில் Chat Gpt தனிபகுங்கு வைக்கிறது. அதில் நாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை பெற்றாலும் அது மறைமுகமாக நம்முடைய டேட்டாக்களை பத்திரப்படுத்தி வைக்கிறது.
சமீபத்தில் கூட நாம் AI யிடம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சேகரித்து வைத்து அதை குரோம் டிஸ்கவர் பகுதியில் நியூஸ் ஃபீட்டாக தகவல்கள் மற்றும் விளம்பரங்களை கொடுத்து வந்தது. இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் பலரின் கருத்தாய் இருந்தது. ஒரு தடவை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் AI மோஸ்ட் டேஞ்சரஸ் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
இதை உருவாக்கியதே அவர்தான். இருப்பினும் AI பற்றி பல விமர்சனங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. இருந்தாலும் அதை தயாரித்து நிறுவனங்கள் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தது. தற்போது இவை அனைத்தும் உண்மையே என்று ஓபன் ஏ ஐ தலைவர் சாம் அல்ட்மன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது,
”நான் ஓப்பனாக சில விஷயங்களை சொல்கிறேன் Chat Gpt போன்ற AI தொழில்நுட்பங்களை மக்கள் அதிகம் நம்ப வேண்டாம். அவை தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்க கூடியது. AI-யும் அவ்வப்போது தவறுகள் செய்யும். இந்த உண்மையைச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பற்றி பலரும் இதன் தாக்கத்தை கூறிவந்த நிலையில் இப்பொழுது ஓபன் ஏ ஐ தலைவரே இதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆகையால் ஏ ஐ போன்ற தொழில்நுட்பங்களை அளவாகவும் அதில் தரப்படும் பதிவுகளை முழுமையாக நம்பாமல் செயல்படுவது நமக்கு பாதுகாப்பு மிக்கது.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…