latest news
அடுத்த அஸ்திரம், பயங்கர ஏ.ஐ. மாடல் – Year End-ல் அறிமுகம்!
ஓபன்ஏஐ நிறுவனம் தனது மற்றொரு பிளாக்ஷிப் ஏஐ மாடல்- ஓரியன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் புதிய ஏஐ மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக ஓபன்ஏ1 ஓ1 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்த மாடல் அறிமுகமாகிறது.
இது குறித்து வெளியான தகவல்களின் படி புதிய ஏஐ மாடல் முதலில் அனைவருக்கும் வழங்கப்படாது. மாறாக தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகவே கிடைக்கும். அதன்பிறகு சாட்ஜிபிடி-யில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பல கட்டங்களில் வெளியிடுவதன் மூலம், ஓபன்ஏஐ நிறுவனம் பரவலான வெளியீட்டை நிகழ்த்த முடியும் என்று
கூறப்படுகிறது.
ஓரியன் ஏஐ மாடல் புதிதான ஒன்றல்ல- இதுபற்றி ஓபன்ஏஐ நிறுவனம் பல்வேறு டீசர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இது அதிநவீன ஏஐ மாடலாகவும், சாட்ஜிபிடி-4 ஐ விட அதநவீன வசதிகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஓரியன் ஏஐ மாடல் முந்தைய ஏஐ மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் கேள்விகளை எழுப்புதல், பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் மொழிகளை புரிந்து கொள்ளும் வசதி பிரதானமாக வழங்கப்படுகிறது.
ஏஐ தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் ஓரியன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஓபன்ஏஐ ஓ1 கோட் மூலம் ஸ்டிராபெரி என்ற குறியீட்டு பெயரில் இந்த மாடல் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஓரியன் மாடலுக்கு தரவுகள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக ஏஐ மாடல் உறுவாக்க ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் கூட்டணி அமைத்து ஓரியன் மாடலை அடுத்த மாதம் ஹோஸ்ட் செய்ய உள்ளனர்.
ஓரியன் மாடல் ஜிபிடி 4-இன் அடுத்த மாடல் என்ற வகையில் ஜிபிடி 5 என்ற பெயரி வெளியிடப்படாது என்று கூறப்படுகிறது. மாறாக இது வேறொரு பெயரில் பயன்பாட்டுக்கு வரும். இந்த பெயர் பற்றிய தகவல்கள் தற்போது வரை மர்மமாகவே உள்ளன.