Connect with us

tech news

ஓபன்ஏஐ-இன் ஸ்டிராபெரி திட்டம்: AI-க்கு பகுத்தறிவு வழங்கும் ஆய்வாளர்கள்..

Published

on

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ சமீப காலங்களில் வரலாறு காணாத வளர்ச்சியை விரட்டி வருகிறது. நாம் கற்பனையிலும் நினைத்திராத ஏராள சேவைகளை ஏஐ தொழில்நுட்பம் நிமிடங்களில் செய்து அசத்துகிறது. நமது கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் துவங்கிய சேவையாக இருந்தது ஏஐ.

ஆனால் இன்று ஏஐ தொழில்நுட்பம் நமக்காக கோடிங் எழுதுவது, பாடல்களை எழுதுவதில் இருந்து, மிமிக்கிரி, வீடியோ எடிட், ஆடியோ எடிட் என ஏகப்பட்ட வேலைகளை அசாத்தியமாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டுள்ளது. பலரது வேலைகளை ஏஐ பறித்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தொடர் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சாட்ட்ஜிபிடி என்ற சேவையை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம் தனது புது ஏஐ சேவைக்கு பகுத்தறிவை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வழங்கியுள்ளது. அதில் புதிய ஏஐ சேவையை உருவாக்கும் ஓபன்ஏஐ திட்டம் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன.

அதன்படி ஓபன்ஏஐ நிறுவனத்தில் ஸ்டிராபெரி பெயரில் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த குழு எதுமாதிரியான வேலைகளில் ஈடுபட்டு வந்தது என்பது பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது பிராஜக்ட் ஸ்டிராபெரியின் நோக்கம் மற்றும் இதர தகவல்களை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஏபன்ஏஐ நிறுவனத்தின் பிராஜக்ட் ஸ்டிராபெரி பயனர் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு மட்டுமின்றி, தனிச்சையாக இணையத்தில் உலவி, தேவையான விவரங்களை சேகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனை ஓபன்ஏஐ டீப் ரிசர்ச் என்று அழைக்கிறது.

“எங்களது ஏஐ மாடல்கள் உலகை நாம் எப்படி பார்த்து, புரிந்து கொள்கிறோமோ அதை போன்றே செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தொடர்ச்சியான ஆய்வுகள் ஏஐ துறையில் மிகவும் இயல்பான ஒன்றுதான். இந்த சிஸ்டம்கள் எதிர்காலத்தில் பகுத்தறிவு பெறும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்,” என்று ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *