ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் X8 சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான பல்வேறு டீசர்களை ஒப்போ தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதனிடையே புதிய ஸ்மார்ட்போன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஃபைண்ட் X8 சீரிஸ் உடன் வழங்கப்படும் 120 வாட் சார்ஜர் பற்றிய சிறப்பம்சத்தை ஒப்போ தெரிவித்துள்ளது.
பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனான ஃபைண்ட் X8 உடன் ஒப்போ நிறுவனம் 120 வாட் சார்ஜிங் அடாப்டர் வழங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் இந்த சார்ஜர் ஒரே சமயத்தில் இரு சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வசதி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும்.
கலியம் நைட்ரைட் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய சார்ஜர் மிக சக்திவாய்ந்தது ஆகும். இதன் காரணமாக குறைந்த வோல்டேஜ் உள்ள போதிலும் பவர் அவுட்புட்-ஐ சீராக வைத்திருக்கும். இந்க சார்ஜிங் அடாப்டரில் டைப் சி, டைப் ஏ போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு இரு சாதனங்களை முறையே 80 வாட் மற்றும் 45 வாட் வேகத்தில் ஒரே சமயம் சார்ஜ் ஏற்றலாம்.
இதில் யுஎஸ்பி சி அடாப்டர் 80 வாட் சார்ஜிங் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட பவர் பேங்க்-ஐ அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது. புதிய ஃபைண்ட் X8 சீரிசில்: ஃபைண்ட் X8, ஃபைண்ட் X8 ப்ரோ மற்றும் ஃபைண்ட் X8 அல்ட்ரா மூன்று மாடல்கள் இடம்பெற உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…