Connect with us

tech news

மிட் ரேஞ்சில் மிரட்டி விட்ட ஒப்போ.. புது போன் அறிமுகம்

Published

on

ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய A3 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிட் ரேஞ்ச் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஓரளவுக்கு தரமான அம்சங்களை கொண்டிருக்கிறது. அதன்படி புதிய ஒப்போ A3 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டிருக்கிறது.

மெமரியை பொருத்தவரை இந்த மாடலில் 6GB ரேம், 128GB மெமரி கொண்டிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு கேமரா சென்சார்களும் 76 டிகிரி அளவுக்கு ஃபீல்டு-ஆஃப்-வியூ கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர்ஓஎஸ் 14.0.1 வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், பிராக்சிமிட்டி சென்சார், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் இ காம்பஸ் உள்ளிட்ட சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

5100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒப்போ A3 5ஜி ஸ்மார்ட்போன் 45W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் MIL-STD 810H தர உறுதித்தன்மை மற்றும் IP54 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

ஒப்போ A3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நெபுலா ரெட் மற்று் ஓசன் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

google news