Connect with us

latest news

வெறும் ரூ. 8,999-க்கு புது போன்.. மிரட்டிவிட்ட ஒப்போ

Published

on

ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ A3x பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுதம் செய்த A3x 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜி வெர்ஷன் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ஒப்போ A3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போன் MIL-STD-810H சான்று பெற்றிருக்கிறது. இது கடுமையான வெப்பம், குளிர் மற்றும் ஷாக் ரெசிஸ்டண்ட் கொடுக்கிறது. இத்துடன் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்பிலாஷ் டச் தொழில்நுட்பம் உள்ளது. இது விரல்கள் ஈரமாக இருக்கும் போதும் திரையை பயன்படுத்த வழி செய்யும்.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6s 4ஜி ஜென் 1 பிராசஸர், 4GB ரேம், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.68 மில்லிமீட்டரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5100mAh பேட்டரி மற்றும் 45 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஒப்போ A3x 4ஜி ஸ்மார்ட்போன் நெபுளா ரெட் மற்றும் ஓஷன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 முதல் துவங்குகிறது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

google news