Connect with us

latest news

67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் F23 5G – இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய ஒப்போ!

Published

on

Oppo-F23-5G

ஒப்போ F23 5ஜி இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய ஒப்போ F23 5ஜி சீரிஸ் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த F21s ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் ஒப்போ F23 5ஜி சீரிஸ் அறிமுக நிகழ்வு மே 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக ஒப்போ வெளியிட்டு இருக்கும் டீசர்களில் ஒப்போ F23 5ஜி டிசைன் மற்றும் சில முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளது.

அதன்படி ஒப்போ F23 5ஜி மாடல் ஃபிலாட் ஃபிரேம் (Flat Frame) கொண்டிருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்குமா அல்லது அலுமினியம் பில்டு கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தற்போது F23 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவுதான். எனினும், இதே மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய ஒப்போ F23 5ஜி மாடல் ஒப்போ A98 5ஜி மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம்.

Oppo-F23-5G

Oppo-F23-5G

ஒப்போ F23 5ஜி மாடலின் மத்தியில் பன்ச் ஹோல் கட்அவுட் உள்ளது. இத்துடன் மெல்லிய பெசல்கள், பவர் பட்டனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் வலுதுபுறத்தில் வழங்கப்படுகிறது. இதன் வால்யூம் ராக்கர்கள் இடதுபுறத்தில் வழங்கப்பட்டு இருக்கலாம். இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்க இரண்டாவது மைக் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் வட்ட வடிவம் கொண்ட இரண்டு வளைவுகள் உள்ளன. இவற்றில் மூன்று கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இந்த வளைவுகளில் ஒப்போ நிறுவனத்தின் குளோ டிசைன் வழங்கப்பட்டுள்ளது. டீசரில் புதிய ஸ்மார்ட்போன் கோல்டு நிறம் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுதவிர மேலும் சில நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒப்போ F23 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

Oppo-F23-5G

Oppo-F23-5G

ஒப்போ F23 5ஜி மாடலில் 120Hz டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று டீசர்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் IPS LCD ரக ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இது பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 695 யூனிட் ஆக இருக்கலாம். மெமரியை பொருத்தவரை ஒப்போ F23 5ஜி மாடலில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் லென்ஸ், 2MP மைக்ரோ கேமரா வழங்கப்படலாம். ஒப்போ F23 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

google news