Connect with us

latest news

அடேங்கப்பா!..அட்டகாசமா அறிமுகமாகுது OPPO K11 5G…இதன் வசதியை பார்த்தா வாய பொளப்பீங்க..

Published

on

oppo k11

பிரபல மொபைல் நிறுவனமான ஓப்போ நிறுவனம் தற்போது புதிய வசதிகளுடன் OPPO K11 5G மொபைலை சீன சந்தையில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த மொபைலானது வருகின்ற ஜூலை 25ஆம் நாள் சீனாவில் விற்பனைக்கு வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சீனாவில் வந்த நிலையில் விரைவில் இந்தியாவிலுல் அறிமுகப்படுத்தபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் பல மேம்படுத்தபட்ட வசதிகள் உள்ளன.

back camera

back camera

விலை:

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.18990 முதல் ரூ.22,900 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது நமக்கு  Glacier Blue மற்றும் Moon Shadow Gray என இரு வண்ணங்களில் கிடைக்கவிருகிறது.

சேமிப்பு தன்மை:

OPPO K11 5G மொபைலானது அட்டகாசமான ஸ்டோரேஜ் வசதிகளுடன் வரவிருக்கிறது. இதில் 12ஜிபி RAM மற்றும் 512 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இந்த ஆன்போர்டு ஸ்டோரேஜை 8ஜிபி விர்சுவல் ரேம் உடன் 20ஜிபி வரை அதிகரித்து கொள்ளலாம்.

திரை:

oppo k11 5g

oppo k11 5g

இந்த மொபைலில் OLED திரையுடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டையும் கொண்டுள்ளது. ஆனால் இதன் திரையின் அளவை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

கேமரா:

இதன் பின்புறத்தில் மூன்று வித கேமராவுடன் 50MP Sony IMX890 பிரைமரி சென்ஸாரையும் கொண்டுள்ளது. மேலும் இதில் Qualcomm Snapdragon 782G சிப்செட்டுடன் ஆக்டாகோர் ப்ராஸசருடன் கிடைக்கவிருக்கிறது. மேலும் இந்த மொபைலானது 5000mAh பேட்டரி சப்போர்ட்டுடன் வெளியாக உள்ளது.

இந்த மொபைலுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருப்பார்கள் என்பதை இது இந்திய சந்தையில் வந்தபின் பார்க்கலாம்.

google news