latest news
இது வேற லெவல்ல இருக்கு… இதோ அறிமுகமானது ஓப்போ லேப்டாப்…!
ஒப்போ நிறுவனம் தனது புதிய மாடல் லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கின்றது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம் .
ஓப்போ நிறுவனம் புதிதாக ஓப்போ பேட் 3 ப்ரோ என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த லேப்டாப் 12.1-இன்ச் 3கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3200 x 2120 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் பிரைட்னஸ், 540 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 7: 5 ஆஸ்பெக்ட் ரேஷியோ, டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன
மேலும் 3.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் இந்த லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 750 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதி கொண்டிருக்கின்றது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகின்றது. மேலும் கலர்ஒஎஸ் 14.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டு இந்த ஒப்போ டேப்லெட் வெளிவந்துள்ளது.
இதன் கேமரா அமைப்பை பொறுத்தவரையில் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் 13எம்பி ரியர் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இந்த லேப்டாப்பில் 8 எம்பி கேமரா இருப்பதால் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் மிகச் சிறப்பாக இருக்கும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஆறு ஸபீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளது. பேட்டரியை பொருத்தவரை 9510mAh வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
இந்த டேப்லெட் பேட்டரியை சார்ஜ் செய்ய 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி, 5ஜி ஷேரிங், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த ஒப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் இந்த லேப்டாப் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஒப்போ பேட் 3 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 3299 yuan அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,365 ஆக உள்ளது.