ஒப்போ நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இத்துடன் மேம்பட்ட கேமரா கொண்ட ப்ரோ வெர்ஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகமானது. இவற்றில் ரெனோ 12 ப்ரோ 5ஜி விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை துவங்கியது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் 8GB ரேம், 256GB மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. முதல் விற்பனையில் புதிய ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
விலை மற்றும் சலுகை விவரங்கள்:
முற்றிலும் புதிய ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 32,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி, டிபிஎஸ், ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ வங்கி கார்டுகள் மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் போது ரூ. 4000 உடனடி தள்ளுபடி பெற முடியும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 28,999 என மாறிவிடும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு கொண்டு ரெனோ 12 5ஜி வாங்குவோர் 12 மாதங்களுக்கு தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 3000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் வாலெட் பரிவர்த்தனைகளை செய்யும் போது மொபிகுவிக் பயனர்கள் ரூ. 1500 வரை கேஷ்பேக் பெறலாம்.
புதிய ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் சன்செட் பீச், ஆஸ்ட்ரோ சில்வர் மற்றும் மேட் பிரவுன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட், ஒப்போ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…