Connect with us

latest news

இனி தேட வேண்டாம்.. விரைந்து பணம் அனுப்ப புது வசதி அறிமுகம் செய்த பேடிஎம்!

Published

on

Paytm-Featured-Img

இந்தியாவில் யுபிஐ பேமன்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, நிதி சேவைகள் வழங்கும் செயலிகளின் பயன்பாடு அதிகரிக்க துவங்கிவிட்டது. பேடிஎம், போன்பெ மற்றும் கூகுள் பே உள்ளிட்ட சேவைகள் டிஜிட்டல் நிதி சேவை வழங்குவதில் முன்னணியில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேலும் இவை போட்டியை எதிர்கொள்ளும் வகையில், சந்தையில் முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகின்றன.

Paytm-

Paytm-

அந்த வரிசையில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பேடிஎம் சேவை தனது செயலியில் பின் ரிசென்ட் பேமன்ஸ் ‘Pin recent payments’ பெயரில் புதிய அம்சத்தை வழங்கி இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் பணம் அனுப்பும் முறை எளிமையாக்கப்படும் என்று பேடிஎம் தெரிவித்து உள்ளது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் ஐந்து பேமன்ட்களை பின் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

Paytm-Pin-Contact

Paytm-Pin-Contact

பயனர்கள் அடிக்கடி பணம் அனுப்பும் ஐந்து பேரை பின் செய்து கொள்ளலாம். இவ்வாறு பின் செய்யப்படும் கான்டாக்ட்கள் எப்போதும் பணம் அனுப்ப கோரும் ஆப்ஷனில் எப்போதும் மேல்புறத்தில் இருக்கும். இதன் மூலம் பணம் அனுப்பும் போது ஒவ்வொரு முறையும், கான்டாக்ட்களை தேட வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் விரைந்து பணம் அனுப்ப முடியும்.

“மொபைல் பேமன்ட் பிரிவில் முன்னணியில் இருப்பதால், நாங்கள் தொடர்ச்சியாக புதுமை மிக்க, புதிய அம்சங்களை தளத்தில் வழங்கி, பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறோம். எங்களின் ‘பின் கான்டாக்ட்’ அம்சம் யுபிஐ பேமன்ட்களை அதிவேகமாக மாற்றும். இந்த மதிப்பு மிக்க அம்சங்கள் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பணம் அனுப்பும் வழிமுறையை எளிமையாக்கி, பயனர்களுக்கு முடிந்த வரை சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது,” என பேடிஎம் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

Paytm-Upi-Lite

Paytm-Upi-Lite

பேடிஎம் செயலியில் ‘பின் கான்டாக்ட்’ அம்சத்தை பயன்படுத்துவது எப்படி ?

ஸ்மார்ட்போனில் பேடிஎம் செயலியை திறந்து, டு மொபைல் ஆர் கான்டாக்ட் (To Mobile or Contact) ஆப்ஷனில் உள்ள யுபிஐ மனி டிரான்ஸ்ஃபர் (UPI Money Transfer) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

முந்தைய ஆப்ஷனை தேர்வு செய்ததும், உங்களின் கான்டாக்ட்கள் மற்றும் யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்பிய மொபைல் நம்பர்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும்.

கான்டாக்ட் அல்லது மொபைல் நம்பரை பின் செய்ய, அவர்களின் ஐகான் அல்லது பெயரை அழுத்தி பிடிக்க வேண்டும். பிறகு பாப் அப் மெனுவில் பின் (Pin) ஆப்ஷன் தெரியும். இதனை க்ளிக் செய்ததும் குறிப்பிட்ட கான்டாக்ட் அல்லது மொபைல் நம்பர் திரையின் மேல்புறத்திற்கு பின் செய்யப்பட்டு விடும்.

பேடிஎம் செயலியில் தற்போது அதிகபட்சமாக ஐந்து கான்டாக்ட்கள் அல்லது மொபைல் நம்பர்களை ஒரே சமயத்தில் பின் செய்து கொள்ள முடியும்.

google news