Categories: latest newstech news

AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதியுடன் பெபில் காஸ்மோஸ் வால்ட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

பெபில் நிறுவனம் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சதந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பெபில் காஸ்மோஸ் வால்ட் என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் ஸ்டிராப், கேசிங் மற்றும் சுழலும் கிரவுன் கொண்டிருக்கிறது. மேலும் வாட்ச் ஸ்டிராப்களை இணைக்க கிலைடு லாக் மெக்கானிசம் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய பெபில் காஸ்மோஸ் வால்ட் மாடலில் 1.43 இன்ச் ஆல்வேஸ் ஆன் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இதில் உடல்நல விவரங்களை டிராக் செய்யும் மேம்பட்ட அம்சங்கள், பிரத்யேக SpO2 சென்சார், ஹார்ட் ரேட் மாணிட்டர், ஸ்லீப் மாணிட்டர் மற்றும் பெபில் ஜென் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Pebble-Cosmos-Vault-Smartwatch

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏராளமான ஸ்போர்ட் மற்றும் டிரெயினிங் மோட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் மற்றும் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

பெபில் காஸ்மோஸ் வால்ட் அம்சங்கள்:

1.43 இன்ச் ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
ப்ளூடூத் காலிங், ப்ளூடூத் 5.0
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
ஹெல்த் மாணிட்டரிங்: ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட்
IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
அலாரம் மற்றும் நோட்டிஃபிகேஷன்
ஜென் மோட், ஸ்லீப், டிஸ்ப்ளே டைமர், ஃபிலாஷ்லைட்
ஃபைண்ட் மோட், வாய்ஸ் அசிஸ்டண்ட், மியூசிக், கேமரா ஷட்டர்
மெனு ஸ்டைல்
240 எம்.ஏ.ஹெச். பேட்டரி
அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

Pebble-Cosmos-Vault-Smartwatch

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

பெபில் காஸ்மோஸ் வால்ட் மாடல் அப்சிடியன் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் கிளாசிக் சில்வர் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பெபில் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago