போன்பெ (PhonePe) நிறுவனம் இந்தியாவில் பீச்சர் போன் பயன்படுத்துவோருக்கு புதிய யுபிஐ தீர்வு வழங்கும் சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பேமண்ட் மற்றும் நிதி சேவைகள் வழங்கும் நிறுவனமான போன்பெ தனது புதிய சேவை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (NPCI) யுபிஐ 123 பே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ன்று அறிவித்து இருக்கிறது.
புதிய சேவை பயனர்கள் தங்களது பீச்சர் போன் மாடல்களில் இருந்து யுபிஐ மூலம் பணிப்பரிமாற்றங்களை செய்ய அனுமதிக்கும். எனினும், இத்தகைய யுபிஐ சேவை இந்தியாவில் அறிமுகமாக மேலும் சில காலாண்டுகள் வரை ஆகலாம் என்றும் போன்பெ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போன்பெ நிறுவனம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் போன்பெ நிறுவனம் கப்ஷப்-இன் சொந்த ஜிஎஸ்பே தொழில்நுட்பத்தை முழுமையாக வாங்கியுள்ளதாகவும், அதில் தேவையான மாற்றங்களை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு போன்பெ நிறுவனம் இந்த பிளாட்ஃபார்மை கஸ்டமைஸ் செய்து அதில் யுபிஐ சேவையை உருவாக்கும். முன்னதாக 2023-ம் ஆண்டு கப்ஷப் தனது ஜிஎஸ்பே சேவையை அறிமுகப்படுத்தியது. இது சிம் சார்ந்து இயங்கும் பேமண்ட் சேவை ஆகும். இது பீச்சர் போன் மாடல்களுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஜிஎஸ்பே சேவை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷனின் யுபிஐ 123 பே சேவை விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் போன்பெ தனது புதிய யுபிஐ சேவையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
யுபிஐ 123பே தொழில்நுட்பம் ரியல்-லைமில் யுபிஐ சேவையை வழங்கும். இது இண்டர்நெட் இல்லாமலும் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த சேவையை பயனர்கள் பீச்சர் போன் மாடல்களிலும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தி பயனர்கள் தனிநபர்களுக்கு நேரடியாக பணம் அனுப்புவது, ஆஃப்லைனில் கியூ-ஆர் மூலம் பேமண்ட் செய்வது மற்றும் பணத்தை மொபைல் நம்பர் மற்றும் கியூ-ஆர் கோட்கள் வழியாகவும் பெற முடியும்.
புதிய யுபிஐ சேவையை கொண்டு இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் பீச்சர் போன் பயன்படுத்துவோர் இடையே பண பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்ய போன்பெ திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…