latest news
சொந்த வீடு வாங்க ரூ. 9 லட்சம் வரை கடன்.. இந்தத் திட்டம் பற்றி தெரியுமா?
பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா. சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்கள், நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு வீடு கட்ட உதவுவதே, இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட சமயத்தில், மார்ச் 31, 2022 ஆண்டிற்குள் நாடு முழுக்க 20 மில்லியன் வீடுகளை மலிவு விலையில் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பிறகு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான காலக்கெடு டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், 2.95 கோடி வீடுகளை இந்தத் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் போது, வீடு கட்டம் செலவு கணிசமான அளவு குறைந்துவிடும்.
இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிப்பவர்கள், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், தெருவோர வியாபாரம் செய்வோர், கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சேரியில் வசிப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினர் (EWS), குறைவான வருமானம் கொண்டவர்கள் (LIG) மற்றும் நடுத்தர வருமானம் (MIG) பிரிவினரும் பயன்பெற முடியும். இதில் EWS பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும், LIG பிரிவில் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 6 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. MIG பிரிவில் வருபவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படுகிறது.