Connect with us

latest news

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

Published

on

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ், மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தை கூடுதல் விருப்பமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வெளியான தகவல்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில்) கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி இந்த திட்டத்தை அமல்படுத்த முன்மொழிந்துள்ளார்.

அதன்படி மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கலின் பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து பயன்பெற்ற 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜ்னா நன்மைகளை மையம் விரிவுபடுத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கையானது, கிட்டத்தட்ட 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, அவர்களுக்கு ஒரு தனித்துவமான அட்டை மற்றும் கூடுதல் கவரேஜ் விருப்பங்களை தற்போதைய பயனாளிகளுக்கு வழங்குகிறது.

பயனாளிகள் தங்களுக்கு இருக்கும் பலன்கள் அல்லது PM-JAY ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட மூத்த குடிமக்கள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் (ESIS) கீழ் வருபவர்களும் PM-JAY திட்டத்தின் பலன்களுக்குத் தகுதி பெற முடியும்.

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் (CPC) ஊதிய கணக்கீடு அடிப்படையில் பங்களிப்புத் தொகை ஒன்று முதல் ஐந்து நிலைகளில் ரூ. 30,000, ஏழு முதல் 11 நிலைகளில் ரூ. 78,000 மற்றும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் ரூ. 1,20,000 ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிஸ்ரா எழுதியிருக்கும் கடிதத்தில், ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு CGHS நன்மைகளைப் பெறுவதற்கு ஒரு முறை பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை மேற்கோள் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், மூத்த குடிமக்கள் CGHS மற்றும் AB PM-JAY இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வைப்பது நியாயமற்றது என்றும் PM-JAY மூத்த குடிமக்களுக்கு அவர்களின் நிதி நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் உதவ உருவாக்கப்பட்டது என்று மிஸ்ரா குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மிஸ்ரா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து மேலும் விவாதிக்க வேண்டும் என்றும், இதற்காக தேசிய கவுன்சிலான JCM-இன் ஊழியர்கள் தரப்புடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *