போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது F6 டெட்பூல் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்தியாவில் டெட்பூல் மற்றும் வால்வரைன் திரைப்படம் வெளியானதை ஒட்டி, இந்த லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் முழுக்க டெட்பூல் மற்றும் வால்வரைன் படங்களால் அலங்கரிக்கப்பட்டன. இதன் பின்புற ஃபிளாஷ் மீது டெட்பூல் லோகோ பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டி பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இதன் சார்ஜரிலும் டெட்பூல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது.
சிம் எஜெக்டர் டெட்பூல் மாஸ்க் வடிவம் கொண்டுள்ளது. பக்கவாட்டு பகுதிகளில் டெட்பூல் ரசிகர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் தீம்களோ அல்லது வால்பேப்பர் எதுவும் வழங்கப்படவில்லை. இவைதவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டான்டர்டு எடிஷன் மே மாதம் இந்தியாவில் அறிமுகமானது.
விலை விவரங்கள்:
போக்கோ F6 5ஜி டெட்பூல் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 7 ஆம் தேதி துவங்க உள்ளது. லிமிட்டெட் எடிஷன் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் மொத்தத்தில் 3000 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும்.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ F6 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 2712×1220 பிக்சல் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 735 GPU, 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் கொண்டுள்ள போக்கோ F6 ஸ்மார்ட்போன் சியோமி ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, 5000mAh பேட்டரி, 90W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…