ரேசர்பே நிறுவனம் முற்றிலும் புதிய மற்றும் அதிவேக யு.பி.ஐ. சிஸ்டத்தை அறிவித்து இருக்கிறது. டர்போ யு.பி.ஐ. என்று அழைக்கப்படும் புதிய யு.பி.ஐ. சிஸ்டம் 1-ஸ்டெப் பேமண்ட் சேவையை வழங்குகிறது. இது வழக்கமான யு.பி.ஐ. முறைகளை விட ஐந்து மடங்கு வரை அதிவேகமானது ஆகும்.
இந்த சேவையை வழங்குவதற்காக ரேசர்பே நிறுவனம் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. புதிய பேமண்ட் சிஸ்டம் யு.பி.ஐ. பேமண்ட்களை அதிவேகமாகவும், எளிமையாகவும் மேற்கொள்ள வழி செய்கிறது.
ரேசர்பே டர்போ யு.பி.ஐ.
புதிய ரேசர்பே டர்போ யு.பி.ஐ. சேவை ஆன்லைன் வர்த்தகர்களுக்கு பணம் அனுப்பும் போது மூன்றாம் தரப்பு யு.பி.ஐ. செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்கி இருக்கிறது. இவ்வாறான அதிவேக வழிமுறை யு.பி.ஐ. பேமண்ட்களின் வெற்றி விகிதத்தை பத்து சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்துடன் டர்போ யு.பி.ஐ. மூலம் வர்த்தகம் செய்வோர், ஒட்டுமொத்த பேமண்ட் அனுபவத்தை முழுமையாக கட்டுப்படுத்த உதவுகிறது.
டர்போ யு.பி.ஐ. சேவையை மேம்படுத்துவதற்காக ரேசர்பே நிறுவனம் பல்வேறு முன்னணி பிராண்டுகளுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி டாடா ஸ்டார்குயிக், இக்சிகோ, எஃப்.என்.பி., டிரெயின்மேன் மற்றும் தான் உள்ளிட்ட பிராண்டுகளுடன் ரேசர்பே கூட்டணி அமைத்துள்ளது.
ரேசர்பே டர்போ யு.பி.ஐ. எவ்வாறு வேலை செய்கிறது?
தற்போதைய யு.பி.ஐ. பேமண்ட் முறைகளில், முதற்கட்டமாக பேமண்ட் வழிமுறையை தேர்வு செய்து அதன்பின் யு.பி.ஐ. முகவரியை பதிவிட வேண்டும்.
இதன் பிறகு, பேமண்ட் முறை உங்களது யு.பி.ஐ. பேமண்ட் ஆப் அல்லது வலைதளத்திற்கு மாற்றப்படும். இதைத் தொடர்ந்து யு.பி.ஐ. பின் நம்பரை பதிவிட்டு, பேமண்ட்-ஐ நிறைவு செய்யலாம்.
டர்போ யு.பி.ஐ. மூலம் ஐந்து வழிமுறைகள் அப்படியே குறைந்து ஒரேயொரு வழிமுறையாக மாறி இருக்கிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்த பேமண்ட் மோட்களில் டர்போ யு.பி.ஐ. ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து யு.பி.ஐ. பின் நம்பர் பதிவிட்டால், பேமண்ட் நிறைவு செய்யப்பட்டு விடும்.
முதற்கட்டமாக உங்களது வங்கி கணக்கை யு.பி.ஐ. அக்கவுண்ட் உடன் இணைப்பது அவசியம் ஆகும்.
ரேசர்பே டர்போ யு.பி.ஐ. சிஸ்டம் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட பே.டி.எம். யு.பி.ஐ. எஸ்.டி.கே. போன்ற சேவை ஆகும். இந்த அம்சமும் பயனர்களை நேரடியாக யு.பி.ஐ. பேமண்ட் செய்ய உதவுகிறது. ரேசர்பே டர்போ யு.பி.ஐ. போன்றே பே.டி.எம். யு.பி.ஐ. எஸ்.டி.கே. அம்சம் கொண்டு யு.பி.ஐ. பின் நம்பர் மட்டும் பதிவிட்டு அதிவேகமாக பணம் அனுப்பிவிட முடியும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…