ஆர்டர் பிச்சிக்குது, குஷியில் ரியல்மி – எந்த மாடல்?

0
91

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நேற்று தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு இன்று (ஜூலை 31) நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது. முன்பதிவு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், புதிய ரியல்மி 13 ப்ரோ சீரிசை வாங்க ஆறு மணி நேரத்தில் சுமார் 10000 பேர் முன்பதிவு செய்ததாக ரியல்மி தெரிவித்தது. இது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் என முன்பதிவு நடைபெற்ற அனைத்து வலைதளங்களிலும் சேர்த்தே எடுக்கப்பட்ட எண்ணிக்கை ஆகும்.

அம்சங்களை பொருத்தவரை ரிய்லமி 13 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 6.7 இன்ச் FHD+ 120Hz Curved AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 13 ப்ரோ மாடலில் 50MP சென்சார் உள்ளது. இரு மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு இரு மாடல்களிலும் 5ஜி வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட், ப்ளூடூத், வைபை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை விவரங்கள்:

இந்தியாவில் புதிய ரியல்மி 13 ப்ரோ 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 32,999 என்றும், 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 36,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு முன் ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனங்களுக்கு மட்டும் 30 நாட்களுக்குள் இலவசமாக மாற்றிக் கொள்ளும் கியாரண்டி வழங்கப்படுகிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here