Connect with us

latest news

ரியல்மி ஃபோல்டிங் போன்.. லீக் ஆன ஆதாரம்- வெளியீடு எப்போ?

Published

on

ரியல்மி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான காப்புரிமை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சீனாவின் தேசிய காப்புரிமை நிர்வாக வலைதளத்தில் ரியல்மி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

முன்னதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ரியல்மி நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ரியல்மி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் காப்புரிமை விவரங்களின் படி ரியல்மி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புத்தக வடிவில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் காந்த சக்தியால் இயக்கும் ஹிஞ்ச் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மாடலை எளிதில் மடிக்கவும், திறக்கவும் காந்த சக்தி உதவும் என்று தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் அதிக வெப்பம் அடைவதை தவிர்க்கும் பாகங்கள் இந்த மாடலில் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் இரு பாதியிலும் அகலமான தோற்றம் கொண்டிருக்கும். இது அந்நிறுவனம் ஏற்கனவே பதிவு செய்த காப்புரிமையை விட வித்தியாசமான தோற்றம் கொண்டுள்ளது. இதில் ஒரு பகுதி செங்குத்தாக, கேலக்ஸி Z சீரிஸ் மாடலில் இருப்பதை போல் காட்சியளிக்கிறது. இந்த மாடல் உண்மையில் விற்பனைக்கு வருமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் அளிக்க வேண்டும்.

 

google news