ரியல்மி நிறுவனத்தின் GT 6T ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேலில் ரியல்மி ஸ்மாரட்போன் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.
கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனின் 128GB மெமரி மாடல் விலை ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு கூப்பன் தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகை உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ரியல்மி GT 6T விலை குறைகிறது.
அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவ்ல சேலில் ரியல்மி GT 6T விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 30,999 என்றே பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு ரூ. 4000 கூப்பன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை செக்அவுட் செய்யும் போது பெற்றுக் கொள்ள முடியும். மாத தவணையில் ரூ. 3,313 வரை சேமிக்க முடியும்.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெறலாம். மேலும், இதே கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்க்கும் போது ரியல்மி GT 6T விலை ரூ. 23,878 என மாறிவிடும். இது அதன் உண்மை விலையை ரூ. 10,120 அதாவது 30 சதவீதம் வரை குறைவு ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 6T மாடலில் 6.78 இன்ச் 120Hz HDR AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5, 5000mAh பேட்டரி, 120W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரிய்லமி யுஐ ஓஎஸ் கொண்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…