ரியல்மி நிறுவனம் தனது GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகிறது. இந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே இந்த ஸ்மார்ட்போனின் அன்பாக்சிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த அன்பாக்சிங் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக செய்யப்பட்டு உள்ளது.
புதிய GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை நிரூபிக்கும் வகையில், இந்த மாடல் தண்ணீருக்குள் வைத்து அன்பாக்சிங் செய்யப்பட்டுள்ளது. இந்த அன்பாக்சிங் வீடியோ யூடியூப் சேனல் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நீச்சல் குளத்தின் தண்ணீருக்குள் வைத்து அன்பாக்சிங் செய்யப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் இந்த ஸ்மார்ட்போன் IP68/69 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் எதுவும் வீடியோவில் இடம்பெறவில்லை.
இது ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 அல்லது எலைட் சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்த F27 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் IP69 தரச் சான்று கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது.
அந்த வகையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனிலும் இந்த வசதி வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் புது ஸ்மார்ட்போன் அதிக அழுத்தம் கொண்ட வாட்டர் ஜெட் மற்றும் தூசுகளை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…