latest news
என் வழி தனி வழி….அமாங்க!..வந்துடுச்சு Realme pad 2…என்ன 6ஜிபி RAMஆ?….
லேப்டாப்களை விட பெரும்பாலும் தற்போது மக்கள் டேப்லெட்டையே விரும்புகின்றனர். இதற்கு காரணம் இதன் எளிமையான அமைப்புதான். இதனை நாம் எங்கு வேண்டுமானாலுல் எளிதாக எடுத்து செல்லலாம். நாம் எங்காவது பயணத்தில் இருந்தால் கூட இதனை நாம் உபயோகிக்கலாம். இதனை ஒரு பெரிய சைஸ் மொபைல் என்றே கூறலாம்.
தற்போது பிரபல மொபைல் நிறுவனமான ரியல்மீ தனது புதிய படைப்பான Realme pad 2-வை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனம் ஜூலை 19ஆம் தேதி 12 மணிக்கு தனது தயாரிப்பினை வெளியிட உள்ளது. இதற்கு பிரபல இ-வணிக நிறுவனமான ஃபிலிப்கார்ட் தனது பக்கத்தில் ஏற்கனவே இதற்கான பக்கத்தை தயார்படுத்தியுள்ளது.
விலை:
இதன் விலை ரூ.17,500ல் இருந்து 22,500க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரை:
Realme pad 2 ஆனது 11.5இன்ச் LCD திரையினையும் 450 nits வெளிச்சத்தினையும் 120 Hz Refresh Rate- ம் கொண்டுள்ளது.
சேமிப்பு தன்மை:
Realme pad 2 டேப்லெட் 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி இண்டெர்னல் மெமரியும் உள்ளது. மேலும் 1 TB வரையிலும் மெமரியினை நாம் விரிவுபடுத்தி கொள்ளலாம்.
கேமரா:
Realme pad 2 டேப்லெட் 12MP பின்புற கேமராவையும் 12MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் 1080பிக்சல் FHD வீடியோவையும் ரெக்கார்டு செய்து கொள்ளலாம்.
பேட்டரி தன்மை:
Realme pad 2 டேப்லெட்டில் 8360 mAh பேடரித்தன்மை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையும் உள்ளது. இதன் மிக வலுவான பேட்டரி அமைப்பினால் சார்ஜானது நீண்ட நேரத்திற்கு சப்போர்ட் செய்யும்.
இதர விமர்சனம்:
இதில் FM Radio மற்றும் Water proof போன்ற வசதிகள் இல்லை. மேலும் இதன் திரையில் பிக்ஸல் மிக குறைவுதான். கேமரா போன்றவற்றை இந்நிறுவனம் இன்னும் மேம்படுத்தலாம்.