Connect with us

latest news

24 ஜிபி ரேம் கொண்ட புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் ரியல்மி?

Published

on

Realme-GT-Neo-5-Featured-img

ஒன்பிளஸ் நிறுவனம் 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தான் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் மட்டுமின்றி, மேலும் சில நிறுவனங்களும் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

Smartphone-Ram

Smartphone-Ram

அதன்படி ரியல்மி நிறுவனமும் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி பிரான்டுகள் ஒரே தாய் நிறுவனத்தின் கீழ் இயங்குவதால், விவரம் அறிந்த பயனர்களுக்கு இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தாது.

Smartphone-Ram-1

Smartphone-Ram-1

இதுகுறித்து பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. எனினும், இது முழுமையாகவே 24 ஜிபி ரேம்-ஆ அல்லது விர்ச்சுவல் ரேமும் சேர்க்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Smartphone-Ram-2

Smartphone-Ram-2

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் குழுமம் (ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் ரியல்மி) அதிக ரேம் கொண்ட மாடல்களை ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த பிரான்டுகளின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் குறைந்தபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும், டாப் என்ட் வேரியன்ட்களில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதிக ரேம் வழங்கப்படுவதால், இந்த குழுமத்தின் கலர்ஒஎஸ் சிறப்பான பேக்கிரவுன்டு ஆப் மேனேஜ்மென்ட் வழங்கும் என்று தெரிகிறது. 24 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் LPDDR5x மெமரி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து மர்மமான ரியல்மி ஸ்மார்ட்போனிலும் 24 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் 1 டிபி வரையிலான மெமரி வழங்கப்பட இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடல், ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

google news