Connect with us

latest news

முரட்டு ஆஃபரால்ல இருக்கு… ஐபோன் 16-ஐ ரூ. 62,930 குறைவாக வாங்கிய பயனர்… அடிச்சது லக்கு..!

Published

on

ஆப்பிள் நிறுவனம் புதிது புதிதாக தங்களது ஐபோன் சீரிஸ்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கின்றது. பொதுவாக அனைவருக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்குவது என்பது ஒரு கனவாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போது ஐபோன் 16 சீரியஸ் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்திய சந்தையில் ஐபோன் 16 சீரிஸ் விலை 79 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் ரெடிட் பயனர் ஒருவர் புதிய ஐபோன் 16 மாடலை வெறும் 27 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் ஐபோன் 16 256 ஜிபி யின் விலை ரூபாய் 89 ஆயிரத்து 900 ஆகும். ரெடிட் சேவையை பயன்படுத்தி வரும் இந்த பயனர் iphone 16 மாடலை 26 ஆயிரத்து 970 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார். இந்த பயனர் புதிய iphone வாங்கும் போது 62,930 ரூபாய் தள்ளுபடியுடன் வாங்கி இருக்கின்றார்.

இவர் புதிய ஐபோன் 16 மாடலை வாங்கும் போது ஹெச்டிஎஃப்சி இன்ஃபினியா கிரெடிட் கார்டை பயன்படுத்தி இருக்கின்றார். இப்படி செய்யும்போது மூலமாக அவருக்கு 62,930 தள்ளுபடி கொடுத்துள்ளது . கிரெடிட் கார்ட் மூலம் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை அவர் மேற்கொண்டு இருக்கின்றார்.

அதன்படி கிடைத்த ரிவார்டு பாயிண்டுகள் அவருக்கு அதிக அளவு சேமிப்பை வழங்கியுள்ளது. இதனால் ஐபோன் 16, 128 ஜிபி விலை 79 ஆயிரத்து 900 இல் தொடங்கி டாப் மாடலின் விலை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய ஐபோன் 16 சீரியஸை ஒருவர் இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

google news